/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சியில் 70 தீர்மானம் நிறைவேற்றம்
/
நகராட்சியில் 70 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஜூலை 30, 2025 01:26 AM
காங்கேயம், காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர்.
நகராட்சியில், 18 வார்டுகளில் குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளில், குழாய் உடைப்பு, சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். நகராட்சி வாகனங்கள் பழுது நீக்குதல், புதிய வாகனங்கள் வாங்குதல் குடிநீர் திட்ட பணிகள், சாலை வசதிகள், தெருவிளக்கு அமைத்தல் அம்ருத் திட்டத்தில் குழாய் பதித்தல், நகராட்சி பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள், சாக்கடை வசதி உள்ளிட்ட பணி என, 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதற்கு உத்தேச செலவாக, 3.50 கோடி ரூபாய்  ஆகும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

