ADDED : ஜூலை 31, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, சஞ்சய் நகர், ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா, 42; கோவையில் ஹோமியோபதி டாக்டராக பணிபுரிகிறார். இவரது தந்தை பழனிசாமி பல் டாக்டராக உள்ளார். சென்னையில் வசிக்கும் பழனிசாமி மகன் சந்தோஷ்குமார் இல்ல விழாவில் பங்கேற்க, கடந்த, 30ம் தேதி காலை சென்னைக்கு சென்றுள்ளனர்.
நேற்று மதியம், ராணி சுப்ரியா வீட்டு வேலைக்கார பெண் வந்த போது, வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள், ராணி சுப்ரியா வீட்டு பீரோவில் இருந்த, 75 சவரன் நகை, 50,000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.