/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொட்டியில் விழுந்த ஆண் குழந்தை பலி
/
தொட்டியில் விழுந்த ஆண் குழந்தை பலி
ADDED : ஆக 18, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: குண்டடம், கணபதிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வீரக்குமார், 29; இவரின் மகன் பரணிதரன், 3; வீரக்குமார் வேலைக்கு சென்ற நிலையில், மனைவி பானுப்பிரியா வீட்டுக்குள் நேற்று முன்தினம் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
வீட்டு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தை பரணிதரன், சிறு தண்ணீர் தொட்டிக்குள் தலைகீழாக விழுந்து விட்டான். அவ்வழியே சென்றவர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

