ADDED : ஜூலை 18, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: ஆடிப் பிறப்பை ஒட்டி, நேற்று பவானி கூடுதுறையில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் ஆண்டுதோறும் ஆடி பிறப்பையொட்டி, இரண்டா-யிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், புனித நீராடி சுவாமி
தரிசனம் செய்வர்.
மேலும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலி-ருந்து பொதுமக்கள் வருவர்.
இந்நிலையில், ஆடி முதல் நாளான நேற்று, பவானி கூடுது-றையில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
அடுத்து வரும் ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு ஆகிய நாட்-களில் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.