/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரத்துடன் வந்த லாரி ஈரோட்டில் கவிழ்ந்தது
/
பாரத்துடன் வந்த லாரி ஈரோட்டில் கவிழ்ந்தது
ADDED : மே 16, 2024 04:29 AM
ஈரோடு ;ஈரோட்டில், தவிடுமூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, தவிடு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி லாரி நேற்று காலை வந்து கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம், சந்தைமேட்டை சேர்ந்த கோவிந்தராஜன், 34, லாரியை ஓட்டி வந்தார். ஈரோடு, ரிங் ரோடு பெரியசடையம்பாளையம் நோக்கி வந்த போது, சாலை விரிவாக்க பணிகளுக்கான டிவைடரை கடந்தபோது, லாரியை இடதுபுறமாக கோவிந்தராஜன் திரும்ப முயன்றார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி டிரைவர் கோவிந்தராஜன், காயமின்றி தப்பினார். லாரியில் இருந்த தவிட்டு மூட்டைகள் சிதறியது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். சாலை விரிவாக்க பணி நடக்கும் பகுதியில், விபத்தை தடுக்க எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவிப்பு இல்லாததே விபத்துக்கு காரணமாக அமைந்தது.