ADDED : ஆக 18, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: கோல்கட்டாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில், பலாத்காரம் செய்து மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, டி.என்.பாளையம், கொண்டையம்பாளையத்தில் பா.ஜ., சார்பில், அக்கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் ரதி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார், மாநில மகளிரணி துணைத்தலைவர் வித்யா ரமேஷ், செயற்குழு உறுப்பினர் கோகிலா அஜித், மகளிர் மாவட்ட பொது செயலாளர் யாமினி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

