ADDED : ஆக 19, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை, கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டரான இவரது வீட்டு பீரோ பின்புறத்தில் நேற்று வித்தியாசமான சத்தம் கேட்டது. ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், ௧0 நிமிடங்கள் போராடி பீரோவுக்கு பின்புறம் பதுங்கியிருந்த, 2 அடி நீள வெள்ளி விரியன் பாம்பை பிடித்தனர். வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தனர்.

