/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை
/
வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை
ADDED : ஆக 06, 2024 01:44 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், அதில் நிலவி வரும் அடிப்படை சிக்கல் குறித்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைமை பொறியாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பாதாள சாக்கடை திட்ட குளறுபடி, சாக்கடை கால்வாய், மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைத்தல், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசித்தனர்.
மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்யும் பகுதிகளை கணக்கெடுத்தல், அவர்களுக்கு கழிவறை வசதி மற்றும் பொருட்களை இருப்பு வைக்கும் அறை வசதி செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த மாமன்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் முன்வைத்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடந்தது.