/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 03, 2024 04:00 AM
ஈரோடு,: மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு, குமலன்குட்டை நகர்புற வாழ்வாதார மையம் மூலம் வெளிப்பணி ஒப்படைப்பு அடிப்படையில் தற்காலிக பணியில் ஈடுபட விண்ணப்பிக்கலாம்.
கல்வி, அனுபவ தகுதி அடிப்படையில், 35 வயதுக்கு உட்பட்டவர்கள், பட்டப்படிப்பு படித்தோர், கணினி துறையில் திறன் பெற்றவர், நல்ல பேச்சு திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தி நகராட்சி, காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, கொளப்பலுார், கூகலுார், காசிபாளையம் (கோபி), வாணிப்புத்துார், நெரிஞ்சிபேட்டை, ஒலகடம் டவுன் பஞ்.,களில் நியமிக்கப்படுவர். வரும், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் நேரில் அல்லது தபாலில், 'மேலாளர், நகர்புற வாழ்வாதார மையம், முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு-638011, தொலைபேசி: 93635 12123' என்ற முகவரிக்கு சுய விபரம், உரிய சான்றிதழ், ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.