/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செட் அமைக்க கோரி ஆட்டோ டிரைவர் மனு
/
செட் அமைக்க கோரி ஆட்டோ டிரைவர் மனு
ADDED : ஆக 24, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஆக. 24-
ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோகளை நிறுத்தும் வகையில், செட் அமைத்துக் கொடுக்க, மாநகராட்சி கமிஷனர் மனிஷிடம், டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மத்திய பஸ் ஸ்டாண்டில், 40 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். இதற்கான குத்தகை கட்டணமும் முறையாக கட்டி வருகிறோம்.
பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி கட்டண கழிப்பிடத்துக்கு கிழக்கு பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. அந்த இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி ஓய்வெடுக்கும் வகையில், மாநகராட்சி செட் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

