ADDED : ஆக 06, 2024 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தில் ஸ்ரீஅருள் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருபவர் சதீஸ்குமார், 30; பா.ஜ., தெற்கு ஒன்றிய பொது செயலாளர். இவரிடம் இருசக்கர வாகனத்துக்கு, காங்கேயம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர், 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்-றுள்ளார்.
மாதம், 2,400 ரூபாய் வீதம், 21 மாதத்துக்கு தவணை கட்ட வேண்டும். முதல் தவணை செலுத்திய நிலையில் அடுத்த தவணைகளை, சங்கர் கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தவணை தொகை கேட்டு, சதீஸ்குமார் தன்னை தாக்கியதாக புகார் கூறி, திருப்பூர் அரசு மருத்து-வமனையில், சங்கர் சிகிச்சைக்கு
சேர்ந்தார்.
அவர் புகாரின்படி காங்கேயம் போலீசார், சதீஸ்-குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.