ADDED : ஜூன் 19, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம், காங்கேயத்தில் கரூர் சாலையில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்தது.
காங்கேயம் வட்ட சட்டப் பணிகள் குழு வக்கீல் ஜெகதீசன், பன்னீர்செல்வம், மோகனப்ரியா சிறப்புரை ஆற்றினர். போக்சோ சட்டம் குறித்தும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு திட்டங்கள் பற்றியும் விளக்கினர். முகாமில் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.