ADDED : செப் 06, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழிப்புணர்வு பேரணி
தாராபுரம், செப். 6-
ஊட்டச்சத்து மாத விழாவை ஒட்டி, தாராபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிரிஜா தலைமை வகித்தார். அமராவதி சிலை ரவுண்டானா, வசந்தா ரோடு, பெரிய கடை வீதி வழியாக சென்று, பழைய நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கோஷமிட்டு சென்றனர்.