/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணையை துார் வார வலியுறுத்தல்
/
பவானிசாகர் அணையை துார் வார வலியுறுத்தல்
ADDED : மே 17, 2024 04:15 AM
ஈரோடு: பவானிசாகர் அணையை துார்வார, பாண்டியாறு - மோயாறு இணைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் வேளாண் இணை இயக்குனருமான ஆசைதம்பி, கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது: பவானிசாகர் அணையில் தற்போது நீர் இருப்பு, 44 அடி மட்டுமே உள்ளது.
பல நுாறு ஏக்கர் பரப்பளவு கொண்ட அணை நீர் தேக்க நிலங்களில், பயிர் சாகுபடிக்கு தேவையான சத்துக்கள் நிரம்பிய வண்டல் மண், பல ஆயிரம் டன் படிந்துள்ளது. கடந்த, 2016 ம் ஆண்டுக்கு பின் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அரசு தரப்பிலும் துார்வாரப்படவில்லை. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கி, அணைக்கு தண்ணீர் வர துவங்கும் முன், விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

