/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் 54 அடியாக சரிவு
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் 54 அடியாக சரிவு
ADDED : மார் 29, 2024 05:03 AM
பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்மட்டம், 54 அடியாக சரிந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், ௨.௪௭ லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி
பெறுகிறது.
தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி, 31 கன அடி நீர் வரத்தானது.
அதேசமயம் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனம், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்காக, 3,100 கன அடியாக திறக்கப்பட்ட நீர், 3,500 கன அடியாக அதிகரிக்கப்
பட்டுள்ளது.
இதனாலும் அணை நீர்மட்டம் சரிவை நோக்கி செல்கிறது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 54.07 அடி, நீர் இருப்பு, 5.4
டி.எம்.சி.,யாக இருந்தது.

