/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டோ டிரைவரை மிரட்டிய யூ - டியூபர் மீது வழக்குப்பதிவு
/
ஆட்டோ டிரைவரை மிரட்டிய யூ - டியூபர் மீது வழக்குப்பதிவு
ஆட்டோ டிரைவரை மிரட்டிய யூ - டியூபர் மீது வழக்குப்பதிவு
ஆட்டோ டிரைவரை மிரட்டிய யூ - டியூபர் மீது வழக்குப்பதிவு
ADDED : மே 16, 2024 11:58 PM
ஈரோடு:ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வெங்கம்பூர் டவுன் பஞ்., காசிபாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் அப்பாஸ், 34; யு - டியூப் சேனலில் செய்தி வெளியிட்டு, வாட்ஸ் ஆப்களில் பரவ விடுவது வழக்கம்.
சில நாட்களுக்கு முன் கொடுமுடியை அடுத்த கொளந்தபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன், 54; கொடுமுடி அரசு மருத்துவமனை அருகே ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.
அவரை சந்தித்த அப்பாஸ், அவரது நண்பர் பழனிசாமி, 'உன்னை பற்றி செய்தி வெளியிட்டுள்ளேன் பார்த்தாயா... தொடர்ந்து செய்தி வெளியிடுவேன்; கொலை செய்வேன்' என கொலை மிரட்டல் விடுத்தனராம்.
யு - டியூபர் அப்பாஸ், பழனிசாமி ஆகியோர் மீது, தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது; பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்புதல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.