/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டு கேட்ட முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்: ஈரோட்டில் பரபரப்பு

ADDED : மார் 31, 2024 11:50 AM

ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 31) ஈரோடு மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்த போது, காய்கறி விற்பனை செய்யும் பெண் ஒருவர் தன் பெயர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச்31) உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களிடையே திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது காய்கறி வியாபாரம் செய்த விஜயா என்ற பெண், முதல்வரிடம் பேசினார்.
அப்போது, எனக்கு மகளிர் உரிமை தொகை வழங்கவில்லை. எனது கணவர் அரசு ஊழியர் என கூறி தர மறுக்கின்றனர், என்றார். உடன் முதல்வர் ஸ்டாலின், 'விதிகளின் படித்தான் தரப்படுகிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன், என்றார். பின்னர் அந்த பெண் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எனது பெயர் விஜயா.
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தும், இதுவரை பணம் வரவில்லை. எனது கணவர் தூய்மை பணியாளர் என காரணம் கூறுகின்றனர். இதற்கிடையில் கட்சியினர் என்னை சந்தித்து விபரம் கேட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.