/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எச்.ராஜாவை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
/
எச்.ராஜாவை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 18, 2024 01:30 AM
எச்.ராஜாவை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ஈரோடு, செப். 18-
பார்லி., எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தேச விரோதி என, தமிழக பா.ஜ., தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா விமர்சனம் செய்ததை கண்டித்து, காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு, மூலப்பாளையத்தில் தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் ரவி, நிர்வாகிகள் முத்துகுமார், பாலசுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். சூரம்பட்டி, 4 ரோட்டில், மாநகர் மாவட்ட காங்., சார்பில் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மண்டல தலைவர் விஜயபாஸ்கர், தீபா, விஜய்கண்ணா, கோபி உட்பட பலர் பங்கேற்றனர்.