ADDED : ஜூலை 28, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு சொசைட்டியில் நேற்று, வெல்லம், நாட்டு சர்க்கரை ஏல விற்பனை நடந்தது. நாட்டு சர்க்கரை, 30 கிலோ எடையில், 3,600 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 ரூபாய் முதல், 1,360 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,400 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,310 ரூபாய் முதல், 1,400 ரூபாய்க்கு விலை போனது. அச்சு வெல்லம், 850 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 ரூபாய் முதல், 1,415 ரூபாய் வரை விற்றது.
கடந்த வாரத்தைவிட மூன்றின் வரத்தும் அதிகரித்தது. ஆனால், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய் விலை குறைந்தும், உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் அதிகரித்தும் காணப்பட்டது.

