ADDED : ஜூன் 23, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு மாநகராட்சி ஆறாவது வார்டு காந்தி நகரில், 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. காந்தி நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தொட்டியில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டதால், சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், தொட்டியை சீரமைக்க, பொது நிதியில் இருந்து, 3.90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது. வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன் தலைமையில், முதலாவது மண்டல தலைவர் பழனிச்சாமி பணியை தொடக்கி வைத்தார்.