/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெற்றோர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடி கொள்ளை நாடகம் சென்னிமலை அருகே மகள் கைது
/
பெற்றோர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடி கொள்ளை நாடகம் சென்னிமலை அருகே மகள் கைது
பெற்றோர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடி கொள்ளை நாடகம் சென்னிமலை அருகே மகள் கைது
பெற்றோர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடி கொள்ளை நாடகம் சென்னிமலை அருகே மகள் கைது
ADDED : செப் 11, 2024 07:16 AM
சென்னிமலை: சென்னிமலை அருகே, பெற்றோர் வீட்டில் மூன்று லட்சம் ரூபாயை திருடிய மகள், கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலமானது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள அர்த்தனாரிபா-ளையத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருமண பத்திரிக்கையை குலதெய்வ கோவிலில் வைத்து கும்-பிட கடந்த, ௮ம் தேதி தனது தாயாருடன் கோகுலகிருஷ்ணன் சென்றார். வீட்டில் திருமணமான சகோதரி ரம்யா, ௩௫; உடல் நிலை சரியில்லாத தந்தை விசுவ
நாதன் மட்டும் இருந்தனர். திரும்பி வந்தபோது தங்கள் இருவரையும், முகமூடி கொள்ளை-யர்கள் கட்டிப்போட்டு, ௩ லட்சம் ரூபாயை திருடி சென்று விட்ட-தாக, ரம்யா கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சென்-னிமலை
போலீசில், புகார் கொடுத்தார். சென்னிமலை எஸ்.ஐ., சரவணன், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ரம்யா சொன்ன நேரத்தில், விசுவநாதன் வீட்டுக்கு வெளியாட்கள் யாரும் வராதது தெரிந்தது. இதனால் ரம்யா மீது சந்தேகம்
திரும்பியது. அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். திருமணமான ரம்யா, கடன் சுமையால் தவித்துள்ளார். சகோதரன் திருமணத்-துக்கு வீட்டில் பணம் வைப்பதை தெரிந்து கொண்டார். வீட்டுக்கு
வந்தவர், மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கடனை அடைத்துள்ளார். தம்பி மற்றும் கணவன் சுபாஷூக்கு தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் என்பதை அறிந்து, கொள்ளையர்கள் கைவ-ரிசை காட்டியதாக நாடகமாடியதை
ஒப்புக்கொண்டார். இதைய-டுத்து ரம்யாவை கைது செய்த போலீசார், பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

