ADDED : மே 17, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தேசிய டெங்கு தடுப்பு தினத்தை ஒட்டி, ஈரோடு மாநகராட்சி சார்பில், நேற்று டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்கள், சுகாதார நிலையங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான மத்திய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வீடுகளில் தண்ணீர் தொட்டி, குடிநீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாதவாறு, தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்து
பராமரிக்க மாநகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.

