ADDED : ஆக 18, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தாராபுரம் பகுதியில், 25க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
இதனால் இம்மருத்துவமனைகளில், அவசர சிகிச்சை மட்டுமே நேற்று நடந்தது. புறநோயாளிகளை மருத்துவர்கள் சந்திக்காததால், அவதிக்கு ஆளாகினர்.

