ADDED : ஜூன் 19, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:குண்டடம், சவுண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார், 49; எல்லப்பாளையம் புதுார் மின்வாரிய அலுவலக ஊழியர்.
கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்தார். நவக்கொம்பில் உள்ள தோட்டத்தில், விஷ மாத்திரையை தின்றுவிட்டு, நண்பர்களுக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தோட்டத்துக்கு சென்று அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் கொண்டு செல்லும் வழியில், குமார் இறந்தார்.

