தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளி மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு

ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளி மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு

ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளி மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு


ADDED : ஜூன் 24, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2024 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை;பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளியில், மாணவ-மாணவியர் அணி நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

பள்ளி தலைவர் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் அஸ்வின் இளங்கோ, ப்ரியா அஸ்வின் முன்னிலை வகித்தனர். முதல்வர் உமையவள்ளி இளங்கோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் பங்கேற்றார். மாணவ அணிகளுக்குரிய கொடி, இலச்சினை வழங்கி பேசினார்.

மாணவர்கள் தலைவராக கோகுலாதித்யா ராஜா, மாணவிகள் தலைவியாக ஸ்மிதி சக்திவேல், விளையாட்டு துறை தலைவராக பவின்பரனேஷ் ஜெகதீஷ்வரன், பன்முக கலைத்துறை தலைவராக க்ருத்திக் பரனவ் சீனிவாசன் ரமேஷ் பதவி ஏற்றுக் கொண்டனர்.

கபில்தேவ் அணியின் தலைவராக ஜெரோம் எஸ்க்கியல்ராஜ் அருண், துணை தலைவராக நிகிதா சுப்ரமணியன் ரமேஷ்குமார், விஸ்வநாதன் ஆனந்த் அணித் தலைவராக தனுசூர்யா பரமேஷ்வரன், துணைத் தலைவராக கேதார்நாத் ஜெயகிருஷ்ணன், பி.டி.உஷா அணித் தலைவராக நிகிதா பழனிசாமி, துணைத் தலைவராக வைஷ்ணவ பரமேஷ்வரன், லியாண்டர் பயஸ் அணி தலைவராக கோகுல்வர்ஷினி ராஜா, துணைத் தலைவராக காயத்ரி ப்ரியதர்ஷினி ஆனந்தன் கோமதி பதவி ஏற்றுக் கொண்டனர்.

நிறைவில் பத்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீரஷ்னா குணசேகரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us