/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வழக்குகளை வாபஸ் பெற விவசாயிகள் மறுப்பு
/
வழக்குகளை வாபஸ் பெற விவசாயிகள் மறுப்பு
ADDED : மே 28, 2024 08:56 PM
ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்காலால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் நேரடியாக, 2.07 லட்சம் ஏக்கர், 1 லட்சம் ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பாசனம் பெறுகிறது.
இந்த வாய்க்காலை, 709 கோடி ரூபாயில் கான்கிரீட் தளம், கான்கிரீட் கரையுடன் நவீன சீரமைப்பு பணி நடந்தது. இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு தரப்பு விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்தனர்.
கடந்த, 13ல் தமிழக நீர் வளத்துறை வெளியிட்ட அரசாணையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், புதிய அரசாணைப்படி பணி தொடர தடை விதிக்கப்பட்டது.
கீழ்பவானி நவீன சீரமைப்பு தொடர்பாக, பணிக்கு தடை உட்பட, மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்வளத்துறை ஈரோடு கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி, அணை செயற்பொறியாளர் அருள் ஆகியோர், கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்க தலைவர் பெரியசாமி, செயலர் பொன்னையன், நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, ராமசாமி உள்ளிட்டோரிடம் நேற்று பேச்சு நடத்தினர்.
அப்போது, வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தினர். அதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், பேச்சு தோல்வி அடைந்தது.
இவ்வாறு கூறினர்.