/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடோனில் தீ விபத்து: பொருட்கள் நாசம்
/
குடோனில் தீ விபத்து: பொருட்கள் நாசம்
ADDED : ஏப் 18, 2024 01:30 AM
ஈரோடு, ஈரோட்டில் குப்பைக்கு வைத்த தீ, அருகில் இருந்த குடோனிலும் பிடித்து எரிந்தது.
ஈரோடு ரயில்வே காலனியில் உள்ளது சி.எஸ்.ஐ. துாய பீட்டர் ஆலயம். இதன் அருகே தனி அறையை குடோனாக அமைத்து பழைய அட்டை, இரும்பு பொருட்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் குடோனுக்கு அருகே குப்பையில் தீ வைத்தனர். காற்றில் தீ பரவி குடோனிலும் தீப்
பிடித்தது. இதில் அங்கிருந்த அட்டைகள் தீக்கிரையாகின. இரும்பு பொருட்கள் தப்பின. ஈரோடு தீயணைப்பு துறையினர், 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையில் நேற்று காலை ஈரோடு சி.என். கல்லுாரி அருகே காலி இடத்தில் காய்ந்த புல்வெளியில் தீப்
பிடித்தது. ஈரோடு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

