/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா தொழில் நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்
/
நந்தா தொழில் நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்
நந்தா தொழில் நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்
நந்தா தொழில் நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்
ADDED : செப் 07, 2024 08:07 AM
ஈரோடு: ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்-டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் காவல் துறை கண்காணிப்-பாளர் ஏ.கலியமூர்த்தி பேசியதாவது:
அதிகாலையில் எழுந்து விவசாயம், அலுவல் வேலை, சுய தொழில் போன்றவைகளில் தன்னை ஈடுபடுத்தி அயராது உழைத்து வரும் பெற்றோர், தங்களது பிள்ளைகளை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற எண்-ணத்தில் பெரும் கனவுடன் இங்கு சேர்த்துள்ளனர். இதை கவ-னத்தில் கொண்டு பயிலும் நான்கு ஆண்டு காலங்களில் சமூக ஊடகங்களை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்தால் கவனம் சிதறாமல் கற்றலில் ஈடுபடுத்தி கொண்டால், வெற்றி இலக்கை அடைவது மிக எளிதான ஒன்று. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா தொழில் நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி கலந்து கொண்டனர். கல்-லுாரி முதல்வர் நந்தகோபால் வரவேற்றார். முதலாமாண்டு துறை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.