தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'நிலக்கடலை பயிர் காப்பீடு அறிவிப்பு தாமதம்'

'நிலக்கடலை பயிர் காப்பீடு அறிவிப்பு தாமதம்'

'நிலக்கடலை பயிர் காப்பீடு அறிவிப்பு தாமதம்'


ADDED : ஜூன் 14, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்று வட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி நிலத்தில், நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது நிலக்கடலை விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பை வெளியிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில் தான் அதிகம் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் விளைச்சல் பாதித்தது. நடப்பாண்டு கோடை மழை பெய்துள்ளதால் நிலக்கடலை விதைப்பு தொடங்கியுள்ளது.

அதேசமயம் நிலக்கடலை பயிருக்கான காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பை, மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வெளியிடுவது வழக்கம். தற்போது காரீப் பருவம் துவங்கியும் காப்பீடு அறிவிப்பு வெளியாகவில்லை. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us