ADDED : ஆக 06, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட கைத்தறி துறை சார்பில், நாளை, 8ம் தேதி கலெக்டர் அலுவலக வளா-கத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனை நடக்கிறது.
இதில் நெசவாளர்களுக்கு இ-முத்ரா கடன் தொகை வழங்குதல், மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்குதல், முதியோர் மற்றும் குடும்ப ஓய்வூதிய திட்ட ஆணை வழங்குதல், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொகை வழங்குதல் நடக்கிறது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி வளா-கத்தில், கைத்தறி ரகங்களை பிரபலப்படுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், சிவகி-ரியில் கைத்தறி நெசவாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாமும் நாளை நடக்கிறது.