/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் மூன்றாவது நாளாக பலத்த மழை
/
ஈரோட்டில் மூன்றாவது நாளாக பலத்த மழை
ADDED : ஆக 09, 2024 02:42 AM
ஈரோடு: ஈரோட்டில், நேற்று மூன்றாவது நாளாக கனமழை பெய்த நிலையில், மழை நீர் தேங்கிய இடங்களில், ஆணையாளர் மணீஷ் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று மதியம் 2:50 மணியளவில் கனமழை பெய்தது. இரணடு மணி நேரத்-துக்கு மேலாக பெய்த மழை பின்னர், சாரல் மழையாக பொழிந்-தது. கனமழை காரணமாக, அன்னை சத்யா நகர், பூம்புகார் நகர், திருவள்ளுவர் நகர், வீரப்பன்சத்திரம், சூளை ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் தேங்கி நின்றது.
குறிப்பாக, மாநகரில் தாழ்வான பகுதிகளான காந்திஜி ரோடு, மணிக்கூண்டு, ஸ்டோனி பிரிட்ஜ், காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, கிருஷ்ணம்பாளையம், காவிரி சாலை, ஆர்.கே.வி. சாலை, கொங்காலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர், கழிவு நீர் ஓடைகளில் நிரம்பி சாலைகளில் பெருக்கெ-டுத்து ஓடியது. அதேபோல் பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாநகரில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்-டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். இதனிடையே, மழைநீர் தேங்கிய, பி.பெ.அக்ரஹாரம், சூளை, அன்னை சத்யா நகர், பாரதி நகர் உள்ளிட்ட இடங்களில், மாநகராட்சி ஆணை-யாளர் மணீஷ் ஆய்வு
மேற்கொண்டார்.
தலைமை பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உட-னிருந்தனர்