தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'இலக்கியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படும் வரலாறு'

'இலக்கியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படும் வரலாறு'

'இலக்கியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படும் வரலாறு'


ADDED : ஆக 10, 2024 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, சி.என்.கல்லுாரி வளாகத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும், ஈரோடு புத்தக திருவிழாவின் நேற்றைய மாலை நேர அமர்வில் தலைவர் ஸ்டாலின் குணசே-கரன் வரவேற்றார்.

'இலக்கியத்தில் வரலாறு' என்ற தலைப்பில் எழுத்தாளர் அ.வெண்ணிலா பேசியதாவது:

சிலப்பதிகாரத்தை எடுத்து கொண்டால், 2,000 ஆண்டு வரலாற்-றுக்கு இலக்கியம்தான் முதல் ஆதாரமாக உள்ளது. இன்று (நேற்று) ஆடி, 24. கோவலன் கொல்லப்பட்டு, மதுரை மாநகரை எரித்த கண்ணகி, 14 நாட்கள் நடந்தே வந்து குமுளி அருகே விண்ணேற்றிப்பாறையில் ஏறி, விண்ணுலகம் சென்ற நாள், இதே நாளாகும். அவரை அழைத்து செல்ல தேவர்களுடன், அவரது கணவரே வந்ததாக சொல்கின்றனர்.

பாண்டியன் இறந்த உடன், அவரது மனைவியும் இறந்து போனார். ஆனால், கோவலன் கொல்லப்பட்ட நிலையில், அவ-ருக்காக நீதியை நிலை நாட்டி, 14 நாட்களுக்கு பின் கண்ணகி விண்ணுலகம் சென்றார். 'இவர்களில் யார் உயர்ந்தவர்' என இளங்கோவடிகள், தனது மனைவியிடம் கேட்டார். 'பாண்டிய மன்னனின் மனைவி உடன் இறந்ததால் அவர் மேன்மையா-னவள் என்றால், நீதியை நிலை நாட்டி இறந்த கண்ணகி தெய்வ-மாவாள்', என்றார்.

இக்கதை, 2ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பதற்கு, பல ஆதா-ரங்கள் உள்ளன. பதிற்றுப்பத்தில், 5ம் பத்துப்பாடலில் சேரன் செங்குட்டுவன் பற்றிய தகவலில், சில ஆதாரம் வருகிறது. அது-போல, இலக்கியங்களால் பல வம்சாவளி தொடர்ச்சிகள் அறியப்-படுகிறது. இலக்கியங்களில் இருந்தே, வரலாறுகள் தொடர்ந்து கொண்டே வருகிறது.

கண்ணகிக்கு இமயத்தில் கல்லெடுத்து, மங்களதேவி கோட்டம் அல்லது கண்ணகி கோட்டம் என்ற இடத்தில் கோவில் அமைத்து, சிலை வைத்தனர். சித்ரா பவுர்ணமியில் நாம், அவரை தரிசிக்கிறோம். கண்ணகிக்கு பூஜை செய்யும் பூசாரி யார் என தேடியபோது, கண்ணகியின் தோழியான தேவந்தி வம்சாவளி-யினர் என தெரிய வந்ததை, எனது நுாலில் குறிப்பிட்டுள்ளேன். கோவலன் கொல்லப்பட்டு, கண்ணகி விண்ணுலகம் சென்றார் என தெரிந்ததும், அவரது தோழியான தேவந்தி நடந்தே வந்து, விண்ணேற்றி பாறையிலும், பின், கண்ணகி கோவிலிலும் அவரை வழிபட்டார். அவரது வழியினரே இன்னும் வழிபாடு செய்கின்றனர், என உறுதியிட்டுள்ளேன்.

சிலப்பதிகாரம், 2 நுாற்றாண்டில் உடையது என்றால், தேவங்கி வழியினரை உறுதிப்படுத்தும்போது, 21ம் நுாற்றாண்டிலும் வர-லாற்றின் மூலம் இலக்கியமும், இலக்கியம் மூலம் வரலாறும் உறுதிப்படுத்தப்படுவதை காணலாம்.

இவ்வாறு பேசினார்.

'பார்வைகளும் தரிசனங்களும்' என்ற தலைப்பில், பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us