ADDED : ஏப் 07, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார், நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில்லாமல் பஸ் ஸ்டாண்டிலும் முக்கிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார், ஒரு சட்டசபை தொகுதிக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடம், ஓட்டுச்சாவடிகளில் சோதனை மேற்கொள்ள பாதுகாப்பை உறுதி செய்ய இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இக்குழுவினர் சோதனையை துவங்கியுள்ளனர். ஓட்டுப்பதிவு நடக்கும் முந்தைய நாள் வரை சோதனையில் ஈடுபடுவர். இவ்வாறு கூறினர்.

