/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாதது அவலம்'
/
'அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாதது அவலம்'
ADDED : ஆக 04, 2024 03:46 AM
ஈரோடு: தீரன் சின்னமலை நினைவு தினமான நேற்று, அரச்சலுார் அருகே ஓடாநிலையில், அவரது சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், ராம-லிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினர்.
அப்போது செங்கோட்டையன் கூறியதாவது: அத்திக்கடவு - அவி-னாசி திட்டத்தை அ.தி.மு.க., ஆட்சியில், 95 சதவீத பணிகளை முடித்தோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஓடியும் பணியை நிறைவு செய்து, தண்ணீர் வழங்காமல் தொடரும் அவ-லத்தை பார்க்கிறோம். விரைவில் தண்ணீர் வழங்க எதிர்பார்க்-கிறோம். கடந்த மூன்றாண்டாக, மாணவ, மாணவியருக்கு இல-வச லேப்டாப் வழங்கும் திட்டம் ஆய்வில் உள்ளதாகவே கூறி வருகின்றனர். அந்த ஆய்வு எப்போது முடியும் என தெரிய-வில்லை. ஆய்வு முடிந்த பின், எங்கள் ஆட்சி மலரும். அப்-போது நாங்கள் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய, பா.ம.க., கவு-ரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., கூறியதாவது: இந்திய சுதந்திர போராட்டத்தில் தீரன் சின்னமலையின் பங்கு மிகப்பெரி-யது.
வரும் கால சந்ததிகள் அறியும் வகையில், அவரது வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும். கடந்த, 5 நாட்களாக காவிரி வழியாக கடலுக்கு, 50 டி.எம்.சி., அளவுக்கு வீணாக செல்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலுக்கு வீணாக செல்-லாமல் தடுக்க வேண்டும். காவிரியில், 5 கி.மீ.,க்கு ஒரு பெரிய தடுப்பணை அமைத்து, அங்கு அதிக அளவில் தண்ணீரை சேமிக்க வேண்டும்.
அந்தந்த பகுதியில் பாசனத்துக்கும், நிலத்தடிக்கும் தண்ணீர் கிடைக்கும். காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அதி-காரமுள்ள ஆணையம் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய த.மா.கா., மாநில துணை தலைவர் விடியல் சேகர் கூறும்போது, ''கீழ்பவானி பாசன நீர் வழிப்பாதையை சுற்றிலும் தீரன் சின்னமலை வாரிசுகளுக்கு விளை நிலங்கள் உள்ளன.
அவர்களுக்கு பாசன நீர் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அரசே நேர-டியாக தலையிட்டு, கீழ்பவானி பாசன நீர் உரிமையை அவர்க-ளுக்கு பெற்றுத்தர வேண்டும்,'' என்றார்.