/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சுபோட்டி
/
கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சுபோட்டி
ADDED : ஆக 26, 2024 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:  கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சுப்போட்டி, ஈரோடு தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் முன்னிலை வகித்தார். அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
செல்வராஜ் எம்.பி., உள்பட பலர் கலந்துகொண்டனர். 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டிக்கு, பரந்-தாமன் எம்.எல்.ஏ., பொன்.முத்துராமலிங்கம், கவிஞர் சல்மா, அமுதரசன், துாத்துக்குடி சரத்பாலா, சுகுணா திவாகர் நடுவர்க-ளாக செயல்பட்டனர். போட்டியில் பள்ளி, கல்லுாரி, மாணவ, -மாணவியர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என, 2௦௦க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர்.

