நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பிரனிதா, மாநில அளவிலான பேச்சு போட்டியில் முதலிடம் பெற்றார்.
'சமத்துவத்தில் கல்வியின் பங்கு' என்ற தலைப்பில் பேசிய மாணவிக்கு முதல் பரிசு கிடைத்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் சான்றிதழ், கேடயம் பரிசாக வென்றார். மாணவிக்கு ஈரோடு மாவட்ட உழவர் விவாதக்குழு, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை, கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது.