/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சங்கமேஸ்வரர் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம்
/
சங்கமேஸ்வரர் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம்
ADDED : ஆக 17, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: உலக நன்மை வேண்டி, லலிதா சகஸ்ர நாமம், வேதநாயகி அம்மனுக்கு பாலாபிஷேகம், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. கணபதி பூஜையுடன் நிகழ்வு தொடங்கியது.
108 தாமரை மலர்களால் சகஸ்ர நாம யாகத்தை தொடர்ந்து, 1,008 லிட்டரில் வேதநாயகி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதற்காக பால் குடங்களை சுமந்து, நுாற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக வந்தனர். மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில், பவானி மற்றம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

