ADDED : ஏப் 09, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாநகர பகுதியில், பூத் சிலிப்புடன், வாக்காளர் கையேடும் வழங்கப்படுகிறது.
அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழி முறை, வாக்குச்சாவடி நிலை அலுவலரை தொடர்பு கொள்ளும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயரை தேட, வாக்காளர் உதவி மைய செயலியை பயன்படுத்துதல், voters.eci.gov.in, elections.tn.gov.in மற்றும் 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளுதல், வாக்களிக்க எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

