ADDED : ஜூலை 09, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை;----சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம், மாதேஸ்வரா நகரை சேர்ந்த சமையல் மாஸ்டர் முருகன், 47; இவரின் மனைவி நிர்மலா, 40; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகனுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகன் பெட்ரோல் பங்க் ஊழியர். குடிபோதை பழக்கத்துக்கு முருகன் அடிமையான நிலையில், நான்கு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குடியை நிறுத்த முடியாமல் தவித்தார். நேற்று குடிக்க பணம் கிடைக்காததால், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி நிர்மலா புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.