ADDED : ஆக 02, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டை அருகே செம்படாபாளையம் ஏரங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 59; பந்தல் போடும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர். அடிக்கடி பதற்றம், படபடப்பு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்தார். ஈரோட்டில் வசித்து வரும் மகள் சாந்தி, மொபைல்போனில் நேற்று தந்தையை தொடர்பு கொண்டு, மருத்துவ பரிசோதனைக்கு ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளார்.
இதற்கு, நான் காவிரி ஆற்றிலேயே ஈரோடு வருகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். கோனேரிப்பட்டி கதவணை நீர்மின் நிலையத்துக்கு மாலையில் சென்றார். ஆற்றில் வெள்ளப்பெருக்கை மக்கள் வேடிக்கை பார்க்க கொண்டிருக்க, பாலத்தில் ஏறிய காவிரி ஆற்றில் குதித்து விட்டார். 1.70 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சில வினாடிகளில் மாயமானார்.