தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மேட்டூர் நீர்மட்டம் மீண்டும் உயர்வு

மேட்டூர் நீர்மட்டம் மீண்டும் உயர்வு

மேட்டூர் நீர்மட்டம் மீண்டும் உயர்வு


ADDED : செப் 03, 2024 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2024 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பால், நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 1 அடி, நீர் இருப்பு, 1 டி.எம்.சி., உயர்ந்தது.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை அதிகரித்ததால் கடந்த, 31ல், 115.56 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. கடந்த, 31ல், வினாடிக்கு, 6,396 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று முன்தினம், 19,199 கனஅடியாகவும், நேற்று, 22,601 கனஅடியாகவும் அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 13,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது.நீர் திறப்பை விட, வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 115.82 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 116.27 அடியாகவும், 86.95 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 87.64 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us