ADDED : ஜூலை 17, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்;முத்துார், காங்கேயம் ரோட்டை சேர்ந்த குப்புசாமி மகன் ஜெகன் பிரகதீஷ், 23; முத்துாரில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தார்.
மாருதி எஸ்-பிரஸ்ஸோ காரில் காங்கேயம் நோக்கி, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜெகன் பிரகதீஷ் சென்றார். பாப்பினி, பச்சாபாளையம் பகுதியில் சாலையோர மரத்தில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய பலியானார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.