/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் அறிவுரை
/
தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் அறிவுரை
ADDED : செப் 03, 2024 04:16 AM
காங்கேயம்: காங்கேயம் ஒன்றியம், நகர தி.மு.க., பொது உறுப்பினர் செயற்குழு கூட்டம், காங்கேயத்தில் நேற்று நடந்தது.
திருப்பூர்
தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் இல. பத்மநாதன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
சாமிநாதன் கலந்து கொண்டார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் கட்சிப்பணி
செய்வது, கொடி கம்பம் நிறுவுவது, முன்னாள் தலைவர்களுக்கு விழா
நடத்துவது, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை
மக்களிடம் எடுத்து சொல்வது, புது உறுப்பினர்களை சேர்ப்பது,
வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது உள்ளிட்ட கட்சி பணிகளை தீவிரமாக
செயல்படுத்த வேண்டும் என்று, அமைச்சர் அறிவுரை வழங்கினார். தலைமை
பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்
ஜெயக்குமார், காங்கேயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணை
பிரகாஷ், காங்கேயம் நகர செயலாளர் சேமலையப்பன் உள்பட, ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.