ADDED : செப் 05, 2026 06:01 AM
ஈரோடு:தமிழக
காவல் துறையினருக்கு சி.யு.ஜி., எண்கள் வழங்க மறுத்து வருவதால்,
சட்டசபை கூட்ட தொடர் நிறைவடைவதற்குள் சி.யு.ஜி., எண்கள் வழங்க
முதல்வர் அனுமதி அளிப்பாரா? என போலீசார் எதிர்பார்த்து
காத்திருக்கின்றனர்.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் அனைத்து
உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை போலீசார் வரை அனைவருக்கும் அரசின்
மூலம் சி.யு.ஜி., எண்கள் பி.எஸ்.என்.எல்., மற்றும் ஏர்டெல் தொலைதொடர்பு
நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த எண்களை பெறுபவர்கள்
அலுவல் ரீதியாகவும், துறை ரீதியாக பிற நபர்களை தொடர்பு கொள்ளவும்
பிரத்யேக எண்ணாக பயன்படுத்தி ஏதுவாக இருந்தது. சில ஆண்டுகளாக
சி.யு.ஜி., எண்கள் வழங்கப்படாததால், போலீசார் தங்களது சொந்த
எண்களையே அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.
இதே
பிற அரசு துறைகளான வருவாய் துறை, மின்சார துறைகளில் பிரத்யேக
சி.யு.ஜி., எண்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே வரும்
சட்டசபை கூட்ட தொடரிலேயே காவல் துறையினருக்கு நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள சி.யு.ஜி., எண்களை மீண்டும் வழங்க போலீசார் கோரிக்கை
வைத்துள்ளனர்.
