ADDED : ஜூன் 30, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி-பங்களாப்புதுார் சாலையில், தடப்பள்ளி வாய்க்கால் கரையில், கோபி நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் கொண்டு வந்து, நேற்று மாலை மருத்துவ கழிவு மற்றும் திடக்கழிவுகளை கொட்டினர்.
இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள், வாகனத்தை சிறைபிடித்து, நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த நகராட்சி அதிகாரிகளிடம், விவசாயிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதனால் கொட்டிய கழிவை திரும்ப அள்ளிக்கொண்டு வாகனம் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.