ADDED : செப் 05, 2024 03:18 AM
ஈரோடு: அரச்சலுார் வாய்க்கால் பாலம் கொடுமுடி சாலையை சேர்ந்தவர் ஜோதிலிங்கம், 65. இவரது சொந்த ஊர் ஊட்டி. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தில், பிலிம் ஆப்ரேட்டராக பணி-யாற்றி, 10 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று ஊட்-டியில் இருந்தார்.
கடந்த மூன்று மாதங்களாக அரச்சலுாரில் உள்ள, இவரது மனைவி தங்கமணியின் சகோதரி பரிமளா யோசேப் வீட்டில் தங்கி இருந்தனர்.கடந்த 3 காலை வெளியே செல்வதாக ஜோதிலிங்கம் கூறி சென்றார். அரச்சலுார் எல்.பி.பி. வாய்க்காலில் விழுந்து விட்டதாக, தங்கமணிக்கு தகவல் கிடைத்-தது. அங்கு சென்று பார்த்த போது வாய்க்கால் கரையில் ஜோதி-லிங்கத்தை படுக்க வைத்திருந்தனர். அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரச்சலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.