ADDED : ஏப் 16, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர், சுந்தரமூர்த்தி, 74, ரியல் எஸ்டேட் புரோக்கர்; திருமணம் ஆகாதவர்.
கோபி, சரவணா தியேட்டர் சாலையில் ஒரு காம்ப்ளக்ஸில் தங்கியிருந்தார். கடந்த, 13ம் தேதி அறை பாத்ரூமில் இறந்து கிடந்தார். கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காம்ப்ளக்ஸ் உரிமையாளர் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

