/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மயங்கி விழுந்த இன்ஸ்பெக்டருக்கு அறுவை சிகிச்சை
/
மயங்கி விழுந்த இன்ஸ்பெக்டருக்கு அறுவை சிகிச்சை
ADDED : மே 07, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்தவர் சிவக்குமார், 46.
மூன்று மாதங்களுக்கு முன்பு, சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபோது, திடீரென மயங்கி கிழே விழுந்தார். உடனடியாக, அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு, தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர், தொடர்ந்து மயக்க நிலையில் இருந்து வருகிறார் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.