sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தெருநாய்களை கட்டுப்படுத்த உத்தரவு

/

தெருநாய்களை கட்டுப்படுத்த உத்தரவு

தெருநாய்களை கட்டுப்படுத்த உத்தரவு

தெருநாய்களை கட்டுப்படுத்த உத்தரவு


ADDED : ஆக 31, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காங்கயம், வீரணம்பாளையம் ஊராட்சியில் தெருநாய் மற்றும் வெறிநாய்களால் ஆடுகள் கொல்லப்படுகின்றன என விவசா-யிகள், தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இறந்த ஆடுகளுடன் சென்று, இழப்பீடு கேட்டு, பி.டி.ஓ.,விடம், விவசாயிகள் சார்பில் வேலுசாமி புகார் மனு அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, பி.டி.ஓ., சார்பில், ஊராட்சி தலைவர்க-ளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழ்நாடு ஊராட்சிகள் (நாய்களுக்கான உரிமம் விதிகள்), 1999 மற்றும் அரசாணை நிலை எண். 202ன் படி, நாய்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் உரிமம் பெறாத நாய்களை அழிப்பது தொடர்-பான தெளிவான வழிகாட்டுதல்

வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல், 30 நாட்க-ளுக்குள் நாயின் உரிமையாளர் அல்லது பாதுகாவலர், உரிமம் பெற அல்லது புதுப்பிக்க, கிராம ஊராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசீலித்து, ஊராட்சி

தலைவர் உரிமம் வழங்கி, உரிம எண், அதற்குரிய 'பேட்ஜ்' வழங்க வேண்டும்; அந்த 'பேட்ஜ்' நாயின் கழுத்தில் தொங்கவிட வேண்டும்.'ஊராட்சியின் உரிமம் பெறாமல் சுற்றித்திரியும் நாய்கள் அழிக்-கப்படும்,' என பொது அறிவிப்பு செய்ய வேண்டும். உரிமம் பெற்ற பேட்ஜ் அணியாமல் சுற்றித்திரியும் நாய்களை, ஊராட்சி நிர்வாகத்தினர் கைப்பற்ற வேண்டும்.ரேபிஸ் மற்றும் வெறிபிடித்த நிலையில் சுற்றித்திரியும் நாய்-களை, பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து கைப்பற்றி அழிக்க வேண்டும். தெரு நாய்கள் உரிமம் தொடர்பாக, ஊராட்சி அலுவலகத்தில் பதிவேடு பராமரிக்க

வேண்டும்.






      Dinamalar
      Follow us