தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாகனங்களை துரத்திய ஒற்றை யானையால் பீதி

வாகனங்களை துரத்திய ஒற்றை யானையால் பீதி

வாகனங்களை துரத்திய ஒற்றை யானையால் பீதி


ADDED : செப் 15, 2024 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாகனங்களை துரத்திய

ஒற்றை யானையால் பீதி

சத்தியமங்கலம், செப். 15-

தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் செல்லும் வழியில், நேற்று வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை சாலையில் உலா வந்தது. மண்ணை தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டு நடமாடியது. அப்போது டூவீலரில் வந்த சிலரை துரத்தியது. இதனால் வாகனங்களை திருப்பிக்கொண்டு அவர்கள் பறந்தனர். தகவலறிந்து யானையை விரட்ட, வேட்டை தடுப்பு காவலர்கள் சென்றனர். அவர்களையும் துரத்தியதால் ஓட்டம் பிடித்து தப்பினர். அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் உலா வந்த யானை, வனப்பகுதிக்கு சென்ற பிறகே, வாகன ஓட்டிகள் பயணத்தை தொடர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us